9 ஆண்டு ரகசியம்! தலிபான் தலைவர் கல்லறை குறித்து வெளிவந்த உண்மை.!
9 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த தலிபான் தலைவரின் கல்லறை இருக்குமிடம் குறித்த உண்மையை தற்போது தலிபான்கள் வெளியிட்டுள்ளனர்
தலிபான்கள் இயக்க தலைவர் முல்லா ஒமர், 2013 ஆம் ஆண்டு இறந்துவிட்டார் என தலிபான்கள் 2015இல் அறிவித்தனர். ஆனால் தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான் தலைவர் முல்லா ஒமரின், கல்லறை இருக்குமிடத்தை தலிபான் தெரிவித்துள்ளது.
தலிபான் தலைவர் முல்லா ஒமரின் கல்லறை, ஆப்கானிஸ்தான் நாட்டின் சாபுல் பகுதியிலுள்ள சூரி மாவட்டத்தில் இருப்பதாக தலிபான் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். நிறைய எதிரிகள் இருந்ததாலும், அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருந்ததாலும் கல்லறை குறித்த தகவல் இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.
د مرحوم امیرالمؤمنین ملا محمدعمر مجاهد (رح) قبر دیولړ مراسمو په ترڅ کې ښکاره شو.
د ا.ا. ا. رئيس الوزراء او د کابینې غړي د زابل سوري ولسوالۍ عمرزو سیمې کې د امیرالمؤمنین زیارت ته تللي وو.
هلته دقرآن کریم ختم وشو او له هیوادوالو وغوښټل شول چې مرحوم ملا صاحب پسې ختمونه او دعا وکړي. pic.twitter.com/CkwbNRXnn6— Zabihullah (..ذبـــــیح الله م ) (@Zabehulah_M33) November 6, 2022