2023 பொங்கலுக்கு முன்பாக காலிப் பணியிடங்கள் நிரப்படும் – கூட்டுறவுத்துறை அறிவிப்பு

Default Image

நடப்பாண்டில் இதுவரை 8,44,082 விவசாயிகளுக்கு ரூ.8341.80 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அறிக்கை.

கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் 2023 பொங்கலுக்கு முன்பாக நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இதனிடையே, கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக பயிர்க் கடன் அளவு ரூ.10,000 கோடியை தாண்டி 2021-2022ஆம் ஆண்டில் 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,202.02 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் இதுவரை 8,44,082 விவசாயிகளுக்கு ரூ.8341.80 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் அதிகபட்ச எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் உள்ள 697 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 154,847 விவசாயிகளுக்கு ரூ.102257 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறையில் முதல் முறையாக ஆடு மாடு கோழி மற்றும் மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு, வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு நடப்பாண்டில் இதுவரை 188,386 விவசாயிகளுக்கு ரூ.768.49 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கணவனை இழந்த கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர் தங்கள் சொந்தகாலிலேயே வாழ்க்கை நடத்துவதற்கு ஏதுவாக, அவர்களுக்கு 5 சதவிகித வட்டியில் கடன் வழங்குவதற்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு நடப்பாண்டில் இதுவரை 3.376 எண்ணிக்கையில் ரூ.7.77 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

14,51,344 எண்ணிக்கையிலான நகைக்கடன்கள் ரூ.5,013.33 கோடியில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 13,12,717 எண்ணிக்கையிலான குடும்பங்கள் பலன் அடைந்துள்ளனர். 1,17,617 எண்ணிக்கையிலான மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.755.99 கோடியில் தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகள் துவங்க இருக்கின்றது. இதன் மூலம் 15,88,300 எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் பலன் அடைவார்கள். நடப்பாண்டில் 14,457 எண்ணிக்கையிலான குழுக்களுக்கு ரூ.474.33 கோடியில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கூட்டுறவுத் றை மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்தியாவில் முதலிடத்தில் வகித்து வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 6,063 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20.28 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக தேசிய அளவிலான கூட்டுறவு ஆராய்ச்சி. பயிற்சி மற்றும் மேலாண்மை கல்வி நிலையம், கொடைக்கானல் வட்டம், மன்னவனூர் கிராமத்தில் உருவாக்கப்பட உள்ளது.

கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழும், FSSAI உரிமமும் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை ISO தரச்சான்றிதழ் பெற்ற நியாய விலைக்கடைகள் 3,682 ஆகும். தள்ளு வண்டியில் வியாபாரம் செய்பவர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் ஆகியோருக்கு நியாய விலைக்கடைகளில் 5 மற்றும் 2 கிலோ FTL சிலிண்டர்கள் விற்பனை துவங்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 27.09.2022 முதல் UPI Integration வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலம் கூகுல்பே, பேடிஎம் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒருமாத காலத்தில் இந்த UPI Integration வசதி அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, ஓரிருமாதங்களில் நிறைவு பெற உள்ளன.

இந்த கணினிமயமாக்கல் பணிகளால் கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் இதுவரை 808-க்கு மேற்பட்ட சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு அதன் தொடர்ச்சியாக ரூ.385.00 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு அவற்றை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIve 2 - BJP - TVK
muthu (9) (1)
Natarajan - CSK
Kailash Gahlot
Seeman - DMK
edappadi - vijay
Ragging Death in Gujarat