#T20 WorldCup: 2024 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன?
2024 ஆம் ஆண்டு நடக்கும் டி-20 உலகக்கோப்பை தொடருக்காக 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
20 அணிகள் பங்கேற்கும் 2024 ஆம் ஆண்டின் ஒன்பதாவது டி-20 உலகக்கோப்பை தொடருக்கு 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இந்த வருட டி-20 உலகக்கோப்பையில், இடம்பிடித்ததன் அடிப்படையில் முதல் 8 அணிகளும், தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளும், ஐசிசி தரவரிசை அடிப்படியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் நேரடியாக இடம்பெற்றுள்ளன.
இதில் நெதர்லாந்து அணி நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் முதல் 8 இடங்களுக்குள் நீடித்தது, இதனால் நெதர்லாந்து அணியும் நேரடியாக நுழைந்துள்ளது. 2024 டி-20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ள 12 அணிகள் பின்வருமாறு, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்.
Here are the 12 teams that have automatically qualified for T20 World Cup 2024 in West Indies & USA.
12 Teams: WI & USA (hosts),
IND, ENG, NZ, PAK, AUS, SA, SL, NED (Top eight teams in T20 WC 2021)
AFG & BAN (as per ICC T20I team rankings)#T20WorldCup #T20WorldCup2024 pic.twitter.com/0DQOyILWBh— CricTracker (@Cricketracker) November 7, 2022