அரசு கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

Default Image

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லை வாங்குவதற்கு அரசு கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்புகளை கண்டறிந்து, மாநில அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். கடலூர் மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகத்தினர் முழு வீச்சில் உரிய நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. கடந்த 10 நாட்களாக பெய்து வருகிற கனமழை காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குவது உள்ளிட்ட அனைத்து நிவாரண நடவடிக்கைகளையும், ஈரப்பதம் உள்ள, மகசூல் செய்யப்பட்ட நெல்லை வாங்குவதற்கு அரசு கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth
Wikki Nayan
AUS vs IND - Session 1