பூமியை நெருங்கிய பெரிய ஆபத்து நீங்கியது.! பசுபிக் கடலில் விழுந்த சீன ராக்கெட் பாகங்கள்.!
சீனா ஏவி, பூமியை நோக்கி வந்த ராக்கெட்டின் உதிரி பாகங்கள் பசுபிக் பெருங்கடலில் இன்று அதிகாலை விழுந்துவிட்டது.
சீனா கட்டுப்பாட்டில் இருக்கும் டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான உபகரணங்களை விண்வெளிக்கு கொண்டு செல்வதற்காக 23,000 கிலோ எடை கொண்ட 108 அடி நீளமுடைய ராக்கெட்டை கடந்த மாதம் அக்டோபர் 31ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.
இந்த ராக்கெட்டானது, தனது வேலையை முடித்துவிட்டு பூமியின் எந்த பகுதியில் விழ வேண்டும், மக்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் விழ வேண்டும் என்கிற விவரம் அதில் கொடுக்கப்படவில்லை.
அதனால், அந்த ராக்கெட் பாகங்கள் எந்த பகுதியில் விழும் என்கிற பயம் உலக நாடுகளின் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் நல்ல வேலையாக ராக்கெட் வளிமண்டலத்தில் நுழைந்து தெற்கு-மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் விழுந்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவிற்கு இது போன்ற சம்பவம் இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் 2020, 2021 மற்றும் 2022 என மூன்று முறைகள் நடந்துள்ளன. அப்போது , மலேசியா, இந்தோனீசியா போன்ற நாடுகளின் பகுதியிலும் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.