இதனால் பேரணி நடத்த இயலாது! அறிக்கை வெளியிட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு!

Default Image

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம் என ஆர்எஸ்எஸ் அபைப்பு அறிக்கை.

தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த நிபந்தையுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், பேரணி ஒத்திவைப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அறிவித்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் சார்பில், கடந்த 97 ஆண்டுகளாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம்.

தமிழகத்திலும் பல ஆண்டுகளாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகிறோம். நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 ஆண்டை முன்னிட்டும், இந்த ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் அக்டோபர் 2-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த தமிழக அரசின் காவல் துறையிடம் மனு அளித்தோம். அவர்கள் எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினோம்.

கடந்த மாதம் நீதிமன்றத்தை அணுகியபோது, நீதிமன்றம் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு காரணத்தினால் அணிவகுப்பை நவம்பர் 6-ஆம் தேதி நாளை நடத்த கூறினார்கள். அதை ஏற்று நாங்கள் நவம்பர் 6-ஆம் தேதி அணிவகுப்பை நடத்த இருந்தோம். நேற்று வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையதல்ல.

காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொது வெளியில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. நாங்கள் சட்ட ரீதியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், நாளை நடக்க இருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என தென் மண்டல தலைவர் வன்னியராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்