போலிஸுக்கு எதிராக கேஸ் போட்ட டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாரின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடைப்பெற்றதாக புகார் எழுந்தது.இதனை ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரித்தார்.விசாரணை அறிக்கையில் தனது பெயர் தேவையற்று சேர்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி , சம்பத் குமாருக்கு எதிராக 100 கோடி மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் டோனி.அதை தொடர்ந்து, சம்பத் குமார் தாக்கல் செய்த பதில் மனு, உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளை களங்கப்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி , ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாரின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டோனி வலியுறுத்தியுள்ளார்