சைட் அடிக்க தல மாதிரியும், சேர்ந்து வாழ தளபதி மாதிரியும் புருஷன் வேணும்.! அடம்பிடித்த தர்ஷா குப்தா.!
நடிகை தர்ஷா குப்தாகென்று தனி இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதில் ஒரு திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’ த்ரில்லர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைமுன்னிட்டு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் சன்னி லியோன், தர்ஷா குப்தா, ஜிபி முத்து, சதிஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.
அதில் கலந்து கொண்ட தர்ஷா குப்தாவிடம் தொகுப்பாளர் ஒருவர் உங்களுக்கு எந்த மாதிரி பசங்களை பிடிக்கும் என்று கேள்வி எழுப்பினார்.? அதற்கு பதில் அளித்த தர்ஷா குப்தா “எனக்கு நல்ல பசங்களாக இருந்தால் பிடிக்கும்…கொஞ்சமாக தாடி இருந்தால் மிகவும் பிடிக்கும்.
சாக்லேட் பாய் சுத்தமாக பிடிக்காது என்று கூற, பிறகு தொகுப்பாளர் பையன் தல அஜித் மாதிரி இருக்கணுமா..? தளபதி விஜய் மாதிரி இருக்கணுமா..? என்று கேள்வி கேட்க அதற்கு பதில் அளித்த தர்ஷா சைட் அடிக்க வேண்டும் என்றால் தல அஜித் மாதிரி இருக்க வேண்டும் வாழனும் என்றால் தளபதி விஜய் மாதிரி இருக்க வேண்டும் என்று கூறி அரங்கத்தை அதிர வைத்துள்ளார் அதற்கான வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.