அமெரிக்கா மீது எந்தஒரு அணு ஆயுத தாக்குதல் நடந்தால் அதோடு கிம் ஜோங் உன் ஆட்சி முடிவுக்கு வரும்- அமெரிக்கா.!
அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அத்துடன் கிம் ஜோங் உன் ஆட்சி முடிவுக்கு வந்து விடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை ஏவுதலுக்கு பிறகு அமெரிக்கா வடகொரியாவை எச்சரித்துள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறியதாவது, அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக எந்தவொரு அணுசக்தி தாக்குதலையும் வடகொரியா செயல்படுத்தினால் அதோடு கிம் ஜாங் உன் ஆட்சி முடிவுக்கு வரும் என்று கூறினார்.
இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் கூறியுள்ளார். வடகொரியா புதன்கிழமை 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது. அதில் ஒன்று ஜப்பான் நாட்டின் ஒரு குடியிருப்பு பகுதியில் விழுந்ததை அடுத்து அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.