டெல்லியில் மோடி-மார்க் ரூட் சந்திப்பு..! மின்னுற்பத்தியை வலுப்படுத்த முடிவு..!!
நெதர்லாந்து நாட்டின் பிரதமருடன், இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ள நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட், சூரிய ஒளி மின்னுற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் பின்னர் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து பெரு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசினர். டெல்லியில் மேலும் இரு நிகழ்ச்சிக்களில் பங்கேற்கும் நெதர்லாந்து பிரதமர், வெள்ளிக்கிழமை அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அந்த மாநில ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பின் பேரில் செல்ல உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்