அடுத்த 3 மணி நேரத்தில் இந்தந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை!

Default Image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் நவம்பர் 6-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்