#RainAlert : இந்த 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
இன்றும் நாளையும் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கரூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் உட்பட 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்கால் மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏழாம் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பருவ மழை தொடங்கியதில் இருந்து அதிகபட்ச மழை அளவாக சீர்காழியில் 22 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.