அவசர பயணமாக டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Default Image

ஆளுநரை திரும்பபெற கோரி திமுக கையெழுத்து பெறும் நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் செல்கிறார்.

தமிழகத்தில் அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்து வரும் நிலையில், அவர் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். இதில் இந்தியா விதிவிலக்கு அல்ல ஆளுநர் தெரிவித்ததற்கு திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதுபோன்று, பல்வேறு கருத்துக்கள் ஆளுநர் வெளியிட்டு, அரசுக்கு இயற்றும் சட்டங்களை கிடப்பில் போடுவது உள்ளிட்ட அரசுக்கு எதிராக செயல்படுவதாக ஆளும் கட்சியினர் குற்றசாட்டி வருகின்றனர். இந்த சமயத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என குடியரசு தலைவரிடம் மனு அளிக்க திமுக தலைமை முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கியுள்ளது.

இதுதொடர்பாக, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டிஆர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் இன்றுக்குள் அண்ணா அறிவாலயம் வந்து, ஆளுநரை திரும்ப பெறுவதற்காக குடியரசு தலைவரிடம் அளிக்க உள்ள மனுவை படித்து பார்த்து கையெழுத்திடுமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று திமுக எம்.பி.க்கள் அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று கையெழுத்திட்டு வருகின்றனர்.

மேலும், கூட்டணி கட்சிகளும் ஆளுநரை திரும்ப பெறுவதற்கான மனுவில் கையெழுத்திட்டு வருகின்றனர். இதுதொடர்பாக திமுக தலைமை விரைவில் டெல்லி சென்று குடியரசு தலைவரிடம் மனுவை ஒப்படைக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவசர பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார். இன்று காலை 10 மணி விமானத்தில் ஆளுநர் ரவி அவசர பயணமாக டெல்லி செல்கிறார். ஆளுநரை திரும்பபெற கோரி திமுக கையெழுத்து பெறும் நிலையில் ஆளுநரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்