சென்னையில் இன்று தொடங்குகிறது குறுநாடக திருவிழா…!
சென்னை நுங்கம்பாக்கம் அலியான்ஸ் பிரான்செஸ் அரங்கத்தில் இன்று தென்னிந்திய குறுநாடக திருவிழா தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் கடந்த 2002-ஆம் ஆண்டு 10 நிமிட நாடகங்களின் திருவிழா தொடங்கியது. இந்த குறு நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஆஸ்திரேலியாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் குறு நாடக திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் அலியான்ஸ் பிரான்செஸ் அரங்கத்தில் இன்று தென்னிந்திய குறுநாடக திருவிழா தொடங்குகிறது. இந்த திருவிழா, வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவை பிரக்ருதி அறக்கட்டளை, புளு லோட்டஸ் அறக்கட்டளை, அலியான்ஸ் பிரான்செஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.
இந்த விழாவில், ஏறக்குறைய 50 நாடகங்கள் வரை அரங்கேற்றப்பட உள்ளது. முதன்முதலாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலத்தில் நாடகங்கள் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.