பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு..! நிரந்தர தீர்வுக்காண மத்தி அரசு ஆலோசனை..!!
எரிபொருள் விலை உயர்வுக்கு நீண்டகாலத் தீர்வை உருவாக்குவது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. பெட்ரோலியம் இறக்குமதியில் உலகிலேயே இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தத் தேவையில் எண்பது விழுக்காடு எரிபொருளை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்க நீண்டகாலத் தீர்வைக் காண்பதற்காக அரசு ஆலோசித்து வருகிறது. விலையை நிலையாக வைக்கப் பல்வேறு வழிகளை ஆராய்ந்தாலும் உற்பத்தி வரியைக் குறைப்பதைத் தவிர வேறு ஒரு வழியும் கைகூடவில்லை. விலைநிர்ணயக் கொள்கையில் மாற்றம் செய்வது, பெட்ரோல், டீசல் இறக்குமதி வரியைக் குறைப்பது ஆகியனவும் அரசின் பரிசீலனையில் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுன் இணைந்திருங்கள்