#T20 WC 2022: பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா வெற்றி.!

Default Image

டி-20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதிய பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ராகுல், கோலி மற்றும் சூரியகுமார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 64 ரன்களும், ராகுல் 50 ரன்களும், சூரியகுமார் 30 ரன்களும், மற்றும் குவித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்களும், ஷாகிப் அல் ஹசன் 2 விக்கெட்களும் எடுத்தனர்.

185 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருக்கும் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்போது தடைபட்டு டக்வர்த் லூயிஸ் முறைப்படி 16 ஒவர்களாகக் குறைக்கப்பட்டு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன் பிறகு களமிறங்கிய வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. அர்ஷ்தீப் வீசிய 12 ஆவது ஓவரில் இரண்டு விக்கெட்கள் எடுத்து ஆட்டத்தை இந்தியா பக்கம் கொண்டு வந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. இறுதி ஒவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் அர்ஷ்தீப் சிங் அந்த ஒவரை வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

அந்த அணி 16 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 145 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 60 ரன்கள் குவித்தார். இதனால் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் விக்கெட்களும், ஹர்டிக் பாண்டியா தலா 2 விக்கெட்களும், மொஹம்மது ஷமி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்