செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு.! வினாடிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றம்.!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவை நிரம்பி வருகின்றன.
புழல் ஏரிக்கு வினாடிக்கு 2000 கனஅடி நீர் வருவதால், செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவான 24 அடி உயரத்தில் 20.64 அடியை எட்டியுள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது
இதனால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 கண் மதகின் 2வது ஷட்டர் வழியாக இந்த நீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர் நிரம்பி செம்பரம்பாக்கம் ஏரி திறப்பது இந்த வருடத்தில் இரண்டாவது முறையாகும். கடந்த ஜூன் மாதம் முதன்முறையாக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.