#T20 WC 2022: டாஸ் வென்று வங்க தேச அணி முதலில் பௌலிங்.!
டி-20 உலகக்கோப்பையில் இந்தியா-வங்கதேசம் ஆட்டத்தில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பௌலிங்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இன்று முன்னதாக நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இதுவரை 11 டி-20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் 10 போட்டிகளில் இந்தியாவும் 1 போட்டியில் வங்கதேசமும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் இன்று இரண்டு அணிகளும் 12 ஆவது முறையாக மோதுகின்றன.
இந்த தொடரில் இரு அணிகளும் இதுவரை 4 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இந்தியா ரன் ரேட் அடிப்படையில் இந்தியா 2 ஆவது இடமும் வங்கதேசம் 3 ஆவது இடமும் வகிக்கிறது. டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா(C), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்(W), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்(C), அஃபிஃப் ஹொசைன், யாசிர் அலி, மொசாடெக் ஹொசைன், ஷோரிபுல் இஸ்லாம், நூருல் ஹசன்(W), முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது