ஜார்க்கண்ட் முதல்வருக்கு அமலாக்கத்துறை சம்மன்!
சட்டவிரோத சுரங்க வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்க இயக்குனரகம் (ED) ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில் சட்டவிரோத சுரங்கம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் செப்டம்பர் மாதத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இதற்கு முன்னதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ராவை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இந்நிலையில் தற்போது ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.