முதல்வரின் முயற்சியால் 2 வருடத்தில் முடிய வேண்டிய பணிகள் 6 மாதத்தில் முடிந்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
குடிசை பகுதிகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்த உத்தரவு.
சென்னை விருகம்பாக்கம் டபுள் டேங்க் சாலையில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், குடிசை பகுதிகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்த உத்தவிட்டிருக்கிறோம்; 200 மருத்துவ முகாம்களை கொண்டு வட்டத்திற்கு ஒன்று என நடத்த முடிவு செய்துள்ளோம்.
2 வருடம் நடைபெற்றிருக்க வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியால் 6 மாதங்களில் முடிந்துள்ளது; 400மோட்டார் மட்டுமே பயன்படுத்தும் அளவுக்கு நிலை மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.