உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முதல் சம்பளம் இவ்வளவுதானா.? வெளியான அதிர்ச்சி ஆதாரம் இதோ.!
உலக அழகி என்ற வார்த்தைக்கு கனகச்சிதமாக பொருத்துபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் என்று கூறலாம். கடந்த 1994- ஆம் ஆண்டு மிஸ் இந்தியா மற்றும் மிஸ் வேர்ல்ட் ஆகிய பட்டங்களை வென்ற இவர் தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் மூலம் தான் அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க தற்போது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக மாறிவிட்டார். சமீபத்தில் பிரமாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் கூட நந்தினி கதாபாத்திரத்தில் கூட நடித்து மக்களின் மனதை கொள்ளையடித்தார்.
இந்த நிலையில், இன்று நடிகை ஐஸ்வர்யா ராய் தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- பருவ வயதில் முளைத்த காதல்… என் அப்பாவுக்கு அடுத்து அவர் தான்.! பிரியா பவானிசங்கர் ஓபன் டாக்.!
இதற்கிடையில், நடிகை ஐஸ்வர்யா ராய் முதன் முதலாக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அவர் மாடலிங்கில் இருந்த போது ஒரு அட்டை பட விளம்பரத்திற்காக வாங்கிய சம்பளத்தின் ரசீது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . அதில் அவருக்கு ரூ.1500 கொடுக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1500 ரூபாய் சம்பளம் வாங்கிய ஐஸ்வர்யா ராய் தற்போது ஒரு படங்களில் நடிக்க கோடி கோடியாய் சம்பளம் வாங்குவது அவருடைய கடின உழைப்பால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
#AishwaryaRai First Salary#HappyBirthdayAishwaryaRai | #HBDAishwaryaRai | #Ulaghazhagi | #nandhini pic.twitter.com/kpbEYGuASF
— CineBloopers???? (@CineBloopers) November 1, 2022