#T20 World Cup 2022: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் .!
டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து-நியூசிலாந்து போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகிறது. நியூசிலாந்து அணி 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து அணி 3 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருக்கிறது.
இன்று வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணியும், அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களமிறங்குகின்றன. டாஸ் வென்று இங்கிலாந்து அணி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு,
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர்(W/C), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்
நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே(W), கேன் வில்லியம்சன்(C), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட்