ஜம்மு-காஷ்மீர் கட்ரா வனப்பகுதியில்..!காட்டுத் தீ..!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கட்ரா வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது.
இதனால், வைஷ்ணவ தேவி கோவிலுக்கான புனித பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 40 டிகிரி வரையில் கோடை வெப்பம் தகிக்கும் நிலையில், கட்ரா வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
காற்றின் வேகத்தில் மளமளவென தீ பரவுவதால், அப்பகுதியே, புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
காட்டுத்தீ ஏற்பட்டுள்ள இந்த வனப்பகுதி, வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் செல்லும் வழியாகும். எனவே, முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, வைஷ்ணவ தேவி கோவிலுக்கான புனித யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக, ரேசி மாவட்ட துணை ஆட்சியர் பிரசன்னா ராமசாமி தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்