கிம் ஜோங் உடனான சந்திப்பு அடுத்த வாரம் முடிவுசெய்யப்படும் – ட்ரம்ப்
வடகொரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக அணு ஆயுத சோதனைகளை நடைபெற்று வந்த நிலையில் இனி மேல் அணு ஆயுத சோதனைகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் சமீபத்தில் தெரிவித்தார். வடகொரிய அதிபரின் இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்பு அளித்தார். வடகொரியாவுக்கு மட்டுமின்றி உலகிற்கே இது நல்ல செய்தி எனவும் அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டெனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங்கை சந்தித்து பேச இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. இருவர் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்கொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி தொடர்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வடகொரியா, மாநாட்டிலிருந்து வெளியேறுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சிங்கப்பூரில் மாநாடு நடைபெறுமா என்பது அடுத்த வாரத்தில் தெளிவாகும் என்று கூறினார். திட்டமிட்டப்படி, மாநாடு நடைபெற்றால், வடகொரியாவுக்கு சிறப்பானதாக அமையும் என்றும் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்