11 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய்.! என்ன காரணம்..?
மங்களூருவில் ஆண் குழந்தையை பிடிக்காத தாய் ஒருவர் பிறந்து 11 நாட்களே ஆன குழந்தையை கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் பெங்களூருவை சேர்ந்த ஹரிஷ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதையடுத்து, 2 பேரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பிறகு பவித்ரா, கடந்த ஆண்டு துமகூரு மாவட்டம் ஷிரா தாலுகாவை சேர்ந்த மணிகண்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பிறகு கர்ப்பமும் ஆனார். கர்ப்ப காலத்தில் தனது குடும்பத்தினருடன் இருந்தால் நன்றாக இருக்கும் என கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக கடபாவில் உள்ள தாய் வீட்டுக்கு பவித்ரா வந்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த 10-ஆம் தேதி பவித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினா் பவித்ராவை, கடபா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. தனக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என ஆசையுடன் காத்திருந்த பவித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் மிகவும் சோகத்தில் இருந்தாராம்.
பெற்றோர்களும் அடுத்தாக பெண் குழந்தை பிறக்கும் கவலை வேண்டாம் எனவும் ஆறுதல் கூறியுள்ளனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் பவித்ரா குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே சென்று அந்தப்பகுதியில் இருந்த ஒரு கிணற்றின் அருகே சென்று பிறந்து 11 வயதான அந்த பச்சிளம் குழந்தையை கிணற்றுக்குள் தூக்கி வீசியுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள், அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் இது குறித்து பவித்ரா மீது உறவினர் ஒருவர் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் பவித்ரா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயே பச்சிளம் ஆண்குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.