குஜராத் பாலம் இடிந்து விழுந்து 140க்கும் மேற்பட்ட மக்கள் பலி… பதற வைக்கும் சிசிடிவி காட்சி.!
குஜராத் மாநிலம், மோர்பி பகுதியிலுள்ள கேபிள் பாலம் ஒன்று நேற்று அறுந்துவிழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு பாலத்தின் மீது சுமார் 500 பேர் வரை நின்று கொண்டுள்ளார்கள்.
இதனால், எடை தாங்காமல் பாலம் அறுந்து விழ, அதில் இருந்த பலர் கீழே உள்ள ஆற்றில் விழுந்துள்ளார்கள். இந்த தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளை தொடங்கினர். இவர்களுடன் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாலம் இடிந்து விழுந்த இந்த சம்பவத்தில் 140 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 180 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ஆற்றில் இன்னும் சில பேர் சிக்கியிருக்கலாம் எனவும், அவர்களைத்தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், பாலம் இடிந்து விழும்போது பதிவான சிசிடிவி காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், பாலத்தில் நிற்கும் மக்கள் போன் உபயோகித்து கொண்டு மற்றும் தங்களுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென பாலம் இடிந்து விழுகிறது. இந்த சிசிடிவி காட்சி காண்போரை பதற வைத்துள்ளது.
குஜராத் மாடல் மோர்பி பாலம்
இடிந்து விழுந்த காட்சி pic.twitter.com/yAqCHLuYt1— Mani Sekaran (@ManiSek32574261) October 31, 2022