IND vs SA: டாஸ் வென்று இந்தியா பேட்டிங் செய்ய முடிவு;அக்சர் பட்டேலுக்கு பதிலாக தீபக் ஹூடா
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.டாஸ் வென்ற இந்திய அணி பேட் செய்ய முடிவு செய்துள்ளது.
பெர்த் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி அக்சர் பட்டேலுக்கு பதிலாக தீபக் ஹூடா களமிறங்குகிறார். தென்னாப்ரிக்கா ஷம்சிக்கு பதிலாக லுங்கி இங்கிடி களமிறங்குகிறார்.
இந்த போட்டியில் வென்றால் இந்தியா அணி இந்த தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்யும் . தென்னாப்பிரிக்கா அணிக்கும் இப்போட்டி முக்கியம்.எனவே , மழை குறுக்கிடாமல் இருந்து ஒரு சுவாரஸ்யமான ஆட்டத்தை கண்டு ரசிக்கலாம்.