#T20 World Cup 2022: முதல் வெற்றியைப் பெறுவது யார்? நெதர்லாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்.!
டி-20 உலகக்கோப்பையில் பாக்-நெதர்லாந்து அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்று நெதர்லாந்து அணி பேட்டிங்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசியின் எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.
இரண்டு அணிகளும் இன்னும் ஒரு வெற்றியை கூட பெறாத நிலையில் இன்றைய போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் களமிறங்குகின்றன. டாஸ் வென்று நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான்(w), பாபர் அசாம்(c), ஷான் மசூத், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா
நெதர்லாந்து அணி: ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓடோவ்ட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ்(w/c), ரோலோஃப் வான் டெர் மெர்வே, டிம் பிரிங்கிள், ஃப்ரெட் கிளாசென், பிராண்டன் குளோவர், பால் வான் மீகெரென்