அண்ணாமலை ஐபிஎஸ் படித்தவர் தானா..? – அமைச்சர் சிவசங்கர்
அண்ணாமலை அரசியலுக்கு வந்த பின் அதிகார போதையில் பேசுவது தகுதியானது அல்ல என அமைச்சர் சிவசங்கர் பேச்சு.
சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி சொல்லி தெரிவிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சிவசங்கர் பேசுகையில் தமிழகத்தில் பாஜக ஒரு எதிர்க்கட்சியை அல்ல. தமிழ்நாட்டில் பாஜக வரக்கூடாது என்று ஏன் செயல்படுகிறோம் என்றால், இந்த மண்ணில் அவர்கள் கால் பதித்தால் நமது தமிழ் மொழி அழிந்துவிடும், தமிழை அழித்துவிட்டு இந்தியை கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொள்வார்கள்.
அதிமுகவை பொருத்தவரையில் கட்சி யாருடையது என்று அடித்துக் கொள்கின்றனர். மேலும் பாஜகவுக்கு அடிமையாக இருப்பதில் அதிமுகவில் போட்டி நிலவி வருகிறது என்று விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அதிகார போதையில் பேசுவது சரியானது அல்ல. ஐபிஎஸ் பதவியில் இருந்த போது அதிகாரத்துடன் இருந்திருக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்த பின் அதிகார போதையில் பேசுவது தகுதியானது அல்ல. அண்ணாமலையின் இந்த செயல்களால் மக்கள் மத்தியில் அவர் ஐபிஎஸ் படித்தவர் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்.