முதலமைச்சர் கெஜ்ரிவால் உளறலுக்கு அளவே இல்லையா? – ஆசிரியர் கீ.வீரமணி
அய்.அய்.டி. படித்த ஆம் ஆத்மி தலைவர்; முதலமைச்சர் கெஜ்ரிவால் உளறலுக்கு அளவே இல்லையா? என ஆசிரியர் கீ.வீரமணி கேள்வி.
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க முயற்சிகள் மேற்கொண்டாலும், எல்லாவற்றிற்கும் இறைவனின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும், என புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி விநாயகர் உருவங்களை அச்சடித்தால் பொருளாதாரத்தை சீரமைக்க பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு சில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஆசிரியர் கீ.வீரமணி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘செல்வக் கொழிப்பை வழங்கும் இலட்சுமியை ரூபாய் நோட்டில் அச்சடித்தால் செல்வம் பெருகுமாம்! அய்.அய்.டி. படித்த ஆம் ஆத்மி தலைவர்; முதலமைச்சர் கெஜ்ரிவால் உளறலுக்கு அளவே இல்லையா? பி.ஜே.பி.யை மிஞ்சும் தேர்தல் உத்தியா? அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்)-க்கு எதிரானது.’ என பதிவிட்டுள்ளார்.
செல்வக் கொழிப்பை வழங்கும் இலட்சுமியை ரூபாய் நோட்டில் அச்சடித்தால் செல்வம் பெருகுமாம்!
அய்.அய்.டி. படித்த ஆம் ஆத்மி தலைவர்; முதலமைச்சர் கெஜ்ரிவால் உளறலுக்கு அளவே இல்லையா? பி.ஜே.பி.யை மிஞ்சும் தேர்தல் உத்தியா?
அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்)-க்கு எதிரானது
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) October 28, 2022