அண்ணாமலை மோடியை போலவே பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது – கே.எஸ்.அழகிரி

Default Image

மனம் போன போக்கில் வாயில் வருவதை எல்லாம் வார்த்தைகளாக அண்ணாமலை பேசுவது அநாகரிகமானது என கே.எஸ்.அழகிரி ட்வீட். 

பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்கள் பேட்டி எடுக்க சென்ற போது, அவர்களை பார்த்து, என்ன மரத்துமேல குரங்கு தாவுற மாதிரி எல்லாரும் சுத்தி, சுத்தி வாறீங்க. ஊருல நாயி, பேயி சாராயம் விற்கிறவன் சொல்றதெல்லாம் கேட்பீங்க சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

அன்னமலை இந்த பேச்சு தற்போது பேசும் பொருளாகியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், மனம் போன போக்கில் வாயில் வருவதை எல்லாம் வார்த்தைகளாக அண்ணாமலை பேசுவது அநாகரிகமானது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பத்திரிக்கையாளர்களிடம் கண்ணியத்துடனும், சுயகட்டுப்பாடுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

அப்படி நடந்து கொள்ள முடியவில்லை என்றால் அவரது தலைவர் மோடியை போலவே பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அண்ணாமலையின் எதிர்கால அரசியலுக்கு நல்லது.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்