Twitter Breaking: எலோன் மஸ்க்கிடம் சென்ற ட்விட்டர் ,CEO பராக் அகர்வால் பணிநீக்கம்
எலோன் மஸ்க் ட்விட்டரின் கட்டுப்பாட்டை எடுத்து, அதன் உயர்மட்ட நிர்வாகிகளை பணிநீக்கம் செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மஸ்க் தலைமை நிர்வாகி பராக் அகர்வால் மற்றும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் அதன் சட்டக் கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்புத் தலைவர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ததாக வாஷிங்டன் போஸ்ட் மற்றும் CNBC ஆகியவை பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
ட்விட்டரை வாங்க நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்த நிலையில் நேற்று தனது ட்விட்டர் ப்ரொஃபைல் ஹேண்டிலில் தலைமை ட்விட் என்றும் மாற்றிவிட்டு, சமையலறை சிங்கை ஏந்தியவாறு ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி இன்றுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ட்விட்டர் தலைமை நிர்வாகி பராக் அகர்வால் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கியபோது அகர்வால் நீதிமன்றத்தை நாடினார்.சமூக ஊடக தளத்தில் போலி கணக்குகளின் எண்ணிக்கையில் தன்னையும் ட்விட்டர் முதலீட்டாளர்களையும் தவறாக வழிநடத்தியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.