மக்கள் எச்சரிக்கையாக, பாதுகாப்பாக இருக்கவே பந்த் நடைபெற இருக்கிறது.! தமிழிசை விளக்கம்.!
பந்த் என்பது போராட்ட வழிமுறைகளில் ஒன்று. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஆட்சியின் மீதான எதிர்ப்பை தெரிவிக்கவும் நடத்துவது தான் பந்த். – தமிழிசை சவுந்தரராஜன்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆளும் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக சார்பில் வரும் 31ஆம் தேதி கோவை மாநகரில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் பாஜக தமிழக தலைவரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ பாஜக சொல்லி தான் மக்கள் பயப்படுவார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிது. மக்கள் செய்தித்தாள் படிக்கிறார்கள், டிவி பார்க்கிறார்கள் அதன் மூலமே இதனை தெரிந்து கொள்வார்கள். ‘ என தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில், ‘ பந்த் என்பது போராட்ட வழிமுறைகளில் ஒன்று. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஆட்சியின் மீதான எதிர்ப்பை தெரிவிக்கவும் நடத்துவது தான் பந்த். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவருவது விருப்பம்.’ என தமிழிசை தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றது. ஏன் இவ்வாறு நடந்தது என்பதை காவல்துறை முறையாக விசாரணை நடத்த வேண்டும்.’ என தமிழிசை சவுந்தராஜன் குறிப்பிட்டு பேசினார்.