மல்லிகார்ஜுனே கார்கே தலைமையில் காங்கிரஸ் மீண்டும் வலிமையடையும்- சோனியா காந்தி.!
மல்லிகார்ஜுனே கார்கே தலைமையில் காங்கிரஸ் மீண்டும் வலிமையடையும் என்று சோனியா காந்தி நம்பிக்கை.
காங்கிரஸின் புதிய தலைவராக இன்று மல்லிகார்ஜுனே கார்கே பதவியேற்றுள்ளார். இது குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதாவது, காங்கிரஸ் இதுவரை பல சவால்களை சந்தித்து வந்தது,ஆனால் தற்போது இருக்கும் ஒற்றுமை மற்றும் பலத்தால் அந்த சவால்களை காங்கிரஸ் முறியடித்துவிடும் என்று அவர் கூறியுள்ளார்.
மல்லிகார்ஜுனே கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்வானது குறித்து எனக்கு முழு திருப்தியாக இருக்கிறது, அவர் அனுபவம் வாய்ந்தவர் மேலும் சாதாரண நிலையிலிருந்து கடினமாக உழைத்து இந்த தலைவர் பதவிக்கு முன்னேறியுள்ளார். எனக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கிறது கார்கே தலைமையில் காங்கிரஸ் வலிமையடையும் என்று நம்பிக்கை இருப்பதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மல்லிகார்ஜுனே கார்கே, தலைவராக தேர்வான பிறகு பேசியதாவது, காங்கிரஸின் தலைவராக தேர்வானது மிகவும் கெளரவம் மற்றும் பாக்கியம். எனக்கு தெரியும், இது கடினமான நேரம் தான் எனினும் காங்கிரஸ், நாட்டிலுள்ள பொய்மை, வெறுப்பு ஆகியவற்றை உடைத்து எறியும்.
மேலும், நான் மக்களை பார்த்து கேட்கிறேன் நாட்டின் மக்களாட்சியைக் காக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் எங்களுடன் கைசேர்ந்து கொள்ளுங்கள் என்று கார்கே கூறியுள்ளார். ராகுல் காந்தியின் பாரத் ஜோதா யாத்திரையால் நாட்டில் புது உத்வேகம் நிரம்பியுள்ளது என்று அவரை பாராட்டியுள்ளார்.