#Breaking : புதிய காவல் நிலையங்கள்.. கூடுதல் சிசிடிவி.., என்ஐஏ விசாரணை.! முதல்வர் அதிரடி அறிக்கை.!

Default Image

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்ற கோரிக்கை உட்பட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.   

கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை காரில் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்ததாக 5 நபர்கள் உபா எனும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக தலைமைசெயலர் இறையன்பு  மத்திய உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம், உளவுத்துறை அதிகாரி  ஆகியோர் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம் முடிவடைந்து, பல்வேறு அதிரடி உத்தரவுகள், பரிந்துரைகள் அடங்கிய தமிழக அரசின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கோவை கார் வெடி விபத்து தொடர்பாக எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில், கோவையில் பாதுகாப்பினைத் தொடர்ந்து உறுதி செய்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கார் வெடி விபத்து தொடர்பாக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும்,

கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்த கரும்புக் கடை சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் , பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமிராக்களை அதிகப்படுத்தவும் இதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்