காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார் மல்லிகார்ஜுனே கார்கே.!
காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுனே கார்கே இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மல்லிகார்ஜுனே கார்கே, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடத்தில் இன்று காங்கிரஸ் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதரா மற்றும் மூத்த தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
அதற்கு முன்னதாக கார்கே, இன்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் தனது மரியாதையை செலுத்தினார். மேலும் 24 ஆண்டுகளில் காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வாவது இதுவே முதல் முறையாகும். முன்னாள் தலைவர் சோனியா காந்தி, புதிதாக பொறுப்பேற்றுள்ள கார்கேவுக்கு வாழ்துக்கள் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி இது குறித்து பேசும்போது, கார்கேவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன். மாற்றம், தான் இந்த உலகை ஆளும் சக்தியாக இருக்கிறது. கடந்த சில காலமாக காங்கிரஸ் நெருக்கடிகளை சந்தித்து வந்தது, இனி நாம் பிரச்சனைகளை விரைவில் வீழ்த்துவோம் என்பதில் நம்பிக்கை இருக்கிறது என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.
Mallikarjun Kharge officially takes charge as Congress president
Read @ANI Story | https://t.co/bJod2bFbjO#MallikarjunKharge #Congresspresident #Congress pic.twitter.com/Oj68Tv3zqy
— ANI Digital (@ani_digital) October 26, 2022