வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! இன்று முதல் இவர்களுடன் பயணித்தால் அபராதம்…!

Default Image

புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி நடப்பவர்களால் நாளுக்குநாள், பல விபத்துக்கள் நேரிட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த  நிலையில், புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி,

  • ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதமும், பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும்.
  • இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உட்பட உடன் பயணிக்கும் நபருக்கும், மோட்டார் வாகன சட்ட விதிப்படி வழக்குப்பதிவு மற்றும் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை அபராதமும் வசூலிக்கப்படும்.
  • வாகன பதிவு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2500 முதல் ரூபாய் 5 ஆயிரம் வரையும், லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டினால் ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
  • சிக்னல் விதிமீறலுக்கு ரூ.500 முதல் ரூ.1500 வரையும்,
    நிறுத்தற் கோடுகள் விதிமீறலுக்கு ரூ.500 முதல் ரூ.1500 வரை அபராதம் விதிக்கப்படும்.
  • 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வேகமாக சென்றால், முதல் முறை ரூபாய் 1000, ஒரு முறைக்கு மேல் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்