சென்னையில் மட்டும் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!
தீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரங்கள் இவற்றுடன் பட்டாசுகளும் தவிர்க்க முடியாதது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரவர் வயதுக்கேற்ற பட்டாசுகளை வெடித்து மகிழ்வர்.
பட்டாசுகள் மகிழ்வைத் தரும் அதே வேளையில் , அவற்றினால் ஏற்படும் ஒளி,காற்று மாசுபாடுகளும், குப்பைகளும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தலைநகர் டெல்லியில் ஏற்கனவே காற்றுமாசு அதிகிரித்துள்ள நிலையில்,பட்டாசு வெடிக்க தடைவிதிக்கபட்டது.தமிழகத்தில் பசுமை பட்டாசுகளை வெடிக்கவும், பட்டாசுகளை வெடிக்க நேர கட்டுப்பாடுகளை வெளியிட்டும் அரசு அறிவுறுத்தியது.
பல இடங்களில் நேரக்கட்டுபாடுகள் மீறப்பட்டது.சென்னையில் நேற்று இரவு காற்றில் மாசு அளவு மிக மோசமான நிலையில் அடைந்தது. கடந்த அக்டோபர் 23,24,25 ஆகிய 3 நாட்களில் மட்டும் 211 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இனிவரும் காலங்களில், இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதும், மாற்று வழிகளை யோசிக்காவிடில் மோசமான நிலையை நோக்கி கொண்டு சென்றுவிடும்.