ராணி மறைவின் போது பணியாற்றியதில் பெருமை அடைகிறேன்.! ராஜினாமா செய்த லிஸ் டிரஸ் உரை.!
இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் மறைவின்போது பிரதமர் பதவியில் இருந்து பணியாற்றியதில் நான் பெருமை கொள்கிறேன். – பிரதமர் பதவியில் இருந்து விலகிய லிஸ் டிரஸ் உரையாற்றினார் .
பிரதமர் பதவியில் வெறும் 6 வாரங்களே பதவியில் இருந்த லிஸ் டிரஸ் அண்மையில் தனது ராஜினாமாவை அறிவித்தார். அதன் பிறகு தான் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இன்று பிரதமராக பொறுப்பேற்று கொண்டார்.
லிஸ் டிரஸ் பதவியில் இருந்த அந்த காலகட்டத்தில் தான் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் உயிரிழந்தார். இதனை குறிப்பிட்டு இன்று தனது பதவியில் இருந்து முழுமையாக விலகிய லிஸ் டிரஸ் உரையாற்றினார்.
அதில் பேசிய லிஸ் டிரஸ், ‘ இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் மறைவின்போது பிரதமர் பதவியில் இருந்து பணியாற்றியதில் நான் பெருமை கொள்கிறேன்.
தற்போது நடைபெறும் உக்ரைன் – ரஷ்யா போரில் உக்ரைன் பக்கம் நாம் (இங்கிலாந்து) நிற்க வேண்டிய தருணம் இது. இங்கிலாந்தில் அதிக வேலைவாய்ப்புகளை புதிய அரசு உருவாக்க வேண்டும். மேலும் அதற்கான பணி பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்’ எனவும் தனது உரையில் லிஸ் டிரஸ் இன்று குறிப்பிட்டு பேசினார்.