ஜெயம் ரவிக்கு இவ்வளவு பெரிய மகன்களா..? குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ.!
நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் முன்னணி நடிகராக வளம் வந்த காலத்திலேயே ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2009- ஆம் ஆண்டு பெற்றோர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு ஆரவ் ரவி, அயன் ரவி என இரண்டு மகன்கள் உள்ளனர். ஏதேனும் விருது வாங்கும் விழாக்கள் அல்லது ஏதேனும் பிரபலங்கள் வீட்டில் திருமணம் நடந்தால் மட்டுமே ஜெயம் ரவி குடும்பத்தை பார்க்க முடியும். ஏனெனில் அடிக்கடி அவருடைய மகன்கள் மற்றும் மனைவி வெளியே செல்லமாட்டார்கள்.
இந்த நிலையில், ஜெயம் ரவி தனது மனைவி மற்றும் மகன்களுடன் நேற்று தீபாவளி கொண்டாடிபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் ஷாக் ஆகி ஜெயம் ரவிக்கு இவ்வளவு பெரிய மகன்களா என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Jayam Ravi Family❤#JayamRavi pic.twitter.com/BBFAGMIiO9
— CineBloopers (@CineBloopers) October 25, 2022
மேலும், ஜெயம் ரவி கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக இவர் நடிப்பில் அகிலன் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.