சத்தீஸ்கர் முதல்வருக்கு சவுக்கடி…! நடந்தது என்ன..?
கௌரி கௌரா பூஜையில், சவுக்கடி வாங்கிய சத்தீஸ்கர் முதல்வர்.
ஆண்டுதோறும் சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள ஜஜாங்கிரி மற்றும் கும்ஹாரி ஆகிய இரண்டு கிராமங்களில் கௌரி கௌரா பூஜை என்கிற பாரம்பரிய விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவில் சாட்டையால் அடிக்கும் பாரம்பரிய நிகழ்வும் நடைபெறுவதுண்டு.
அந்த வகையில், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு சவுக்கடி வாங்கினார். இந்த சவுக்கடி வாங்குவதால், நல்ல அதிஷ்டம் கிடைக்கும் என்றும், தீமைகள் விலகும் என்றும் கூறப்படுகிறது.