துப்பாக்கிச்சூட்டை கண்டித்து..!நாளை மாநிலம் தழுவிய முழு போராட்டம்…!!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, தோழமைக் கட்சிகளுடன் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை, முதலமைச்சரோ, அமைச்சர்களோ இதுவரை சந்தித்து ஆறுதல் கூறாததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அமைதியான முறையில் தீர்வு காண முயற்சிக்காததை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்