வரலாற்றில் ஒரு கருப்பு தினம்.?நெஞ்சில் பதிந்த ஓவ்வொரு தோட்டாவும் திரும்பி வரும்..!நடிகர் சித்தார்த்
நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் நேற்று ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர்.
இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர்.இன்று கூட அண்ணா நகரில் ஒருவர் பலி.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இறந்த போன போரட்டக்காரர்களின் நெஞ்சில் பதிந்த ஓவ்வொரு தோட்டாவும் திரும்பி வந்து தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் இந்த கேலிக்கூத்தான அரசை வாட்டிவதைக்கதான் போகிறது.படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைளும்,பிரத்தனைகளும்.நமது வரலாற்றில் என்ன ஒரு கருப்பு தினம்.? என ட்விட் செய்துள்ளார்.
https://twitter.com/Actor_Siddharth/status/999035362382098432
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்