தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா?அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா?கொதித்த கமல்ஹாசன்
தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா?என்று மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தூத்துக்குடியில் காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டது.பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார்.4 பேர் படுகாயம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் போராட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கம் என்று தமிழக உள்துறை அறிவித்துள்ளது .
இதற்கு மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது, தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா?அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா?சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்.மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை.அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை என்று மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.