பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது : பிரசாத்..!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், உற்பத்தி வரியை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், எரிபொருள் விலையை கட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
பெட்ரோல் மீதான உற்பத்தி வரி நாட்டின் உள்கட்டமைப்பின் பயன்பாட்டிற்காக செலவிடப்படுகிறது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இதனிடையே, அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக் கொள்ளாத வரையில், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது சாத்தியமில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஷிவபிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.