இந்திய உளவுத்துறையின் அதிர்ச்சித்தகவல்..!
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள், இயங்கும் இடத்தை கண்டறிய முடியாத வகையிலான செல்போனை உருவாக்கியுள்ளதாக, இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக, இந்திய எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கு உதவுவதற்காக, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் மாணவர் பிரிவு இந்த புதிய செல்போனை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லையில் ஊடுரும் தீவிரவாதிகள், இந்த செல்போன் ஆன் செய்தவுடன், அது உடனடியாக அருகில் உள்ள செல்போன் டவரில் இருந்து எவ்வித அனுமதியும் இன்றி சிக்னலை பெற்று, இயங்கத் தொடங்கும் என்றும், அதை யாராவது இடைமறிக்க முயற்சித்தால், உடனடியாக செல்போன் செயலிழந்துவிடும் என்றும் உளவுத்துறையின் கூறுகின்றனர்.
இதனால், தீவிரவாதிகளின் இருப்பிடத்தை அறிய முடியாது என்று கூறும் அவர்கள், இந்திய எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்காக, 450 இளைஞர்களை தேர்ந்தெடுத்து, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் உளவுத்துறையினர் தெரிவிக்கின்றனர்.