டி20 உலகக்கோப்பை.! அதிரடி காட்டிய நியூசிலாந்து.! ஆஸ்திரேலியாவுக்கு 201 ரன்கள் இலக்கு.!
டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 200 ரன்கள் எடுத்திருந்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
2022க்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்றைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியினை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே ரன்களை குவிக்க தொடங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆலன் 16 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆக, கன்வே 58 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து இறுதி வரையில் களத்தில் இருந்தனர்.
கேப்டன் வில்லியம்சன் 23 ரன்கள் எடுத்தும் , பிலிப்ஸ் 12 ரன்கள் எடுத்தும் அவுட் ஆனர். நீசம் 26 ரன்களுடன் இறுதி வரையில் களத்தில் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்குக் 200 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து அணி,
20 ஓவரில் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 5 ஓவருக்குள் 2 விக்கெட் இழந்து 32 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.