BREAKING NEWS:தூத்துக்குடிக்கு வருகிறது மத்திய படை!நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தயார்!மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா
தமிழகம் கேட்டால் மத்திய படைகளை அனுப்பத் தயார் என்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான உதவிகளை செய்ய தயார் என்றும் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இன்று தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பத்தை கண்டித்து தூத்துக்குடியில் உள்ள பிரையன்ட் நகரில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்கபட்டது.
தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் நடைபெற்றது.பொதுமக்கள் கல்வீசி தாக்கியதை தொடர்ந்து காவல்துறையினர் ரப்பர் குண்டு வீசினர்.அண்ணாநகர் பகுதியில் திடீரென பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடியில் காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டது.பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார்.4 பேர் படுகாயம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.