BREAKING NEWS:தூத்துக்குடியில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்கிச்சூடு!காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு!4 பேர் படுகாயம்
தூத்துக்குடியில் பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் நடைபெற்றது.
இதேபோல் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பத்தை கண்டித்து தூத்துக்குடியில் உள்ள பிரையன்ட் நகரில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்கபட்டது.
தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் நடைபெற்றது.பொதுமக்கள் கல்வீசி தாக்கியதை தொடர்ந்து காவல்துறையினர் ரப்பர் குண்டு வீசினர்.அண்ணாநகர் பகுதியில் திடீரென பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடியில் காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டது.பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார்.4 பேர் படுகாயம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.