பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு திட்டம்..!!
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதை அடுத்து, அதன் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 24 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 15 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாயை தாண்டிவிட்டது. இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 2 ரூபாய் வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும், கலால் வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.